புதிய சட்டமூலத்தை கிழித்து எறிந்த எதிர்க்கட்சித்தலைவர்
உள்ளூராட்சிமன்றங்களுக்காக அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலத்தை பூஜாப்பிட்டிய பிரதேசசபையின் எதிர்கட்சி தலைவர் எஸ்.எம். கலீல் கிழித்து எறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியே அவர் இந்த சட்டமூலத்தை கிழ்த்து ஏறிந்தார்.
இலங்கையில் புரையோடிப் போயிருந்த இனப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைப்பதற்காக அன்றைய ஜனாதிபதியான திருமதி சந்திரிகாவால் தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அத்தீர்வுத் திட்டம் இலங்கையை (5) பிராந்தியங்களாக உருவாக்கி அப்பிராந்தியங்களை மத்திய அரசாங்கம் கலைக்கமுடியாதவாறான அதிகாரங்களை உள்ளடக்கியிருந்தது. அதற்கமைய வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களும் ஓர் தனியான பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதற்கான தீர்வு நகலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது (03.08.2000) அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதியாக வருவதற்கு துடிப்பவருமான ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் தீர்வுத்திட்ட நகலை பாராளுமன்றத்திற்குள்ளேயே தீயிட்டுக் கொழுத்தி தமது வீரச்செயலை தெரிவித்தார். அவரின் அரசியல் சித்தாந்தத்தினை பின்பற்றுபவர் அல்லவா எஸ்.எம் கலீல் அவர் செய்த செயலில் என்ன தவறு இருக்கின்றது.
இது தொடர்பில் விரிசாக நோக்கும் போது பூஜாப்பிட்டிய பிரதேசசபையின் மாதாந்த கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு எதிர்ப்பினை தெரிவித்தார்.தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்று முன்னர் உரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பல அதிகாரங்களை வழங்கி இருந்தார்.
இப்புதிய சட்டத்தின் மூலம் இவ்வதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன் அதன் தலைவர்களுக்கு இருந்த அதிகாரமும் இல்லாமல் போகின்றது. எனவே இச்சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம் என்று கூறினார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்தை எதிர்க்கும் பிரேரனையை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுனில் கொடுகொடெல்ல வழிமொழிந்து உரையாற்றியதுடன் அந்த பிரேரணை இந்த சபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment