தன்னை கட்டுப்படுத்தி கொள்ளத் தெரிந்தவனே தலைவனாக முடியும்! கூறுகின்றார் மஹிந்தர்.
மாத்தறையிலுள்ள சுஜாதா மகளிர் கல்லூரியின் இரு மாடிக்கட்டடமொன்ற திறந்து வைக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாணவர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:
பயங்கரவாதத்தை தோற்கடித்து பெற்ற சுதந்திரத்தை நாம் பாதுகாத்தது போன்று நாட்டின் ஏழ்மையும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு எமது மாணவர் சமுதாயம் சிறந்த அறிவாளிகளாக மாற வேண்டும். அந்த நோக்கத்தை அடைவதற்காக இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத சேவைகளை எமது அரசாங்கம் ஆற்றுகின்றதென்று சொன்னால் அதில் எவ்வித தவறும் இல்லை.
ஏனையோரை வழி நடத்துவதற்காகவே தலைவர்கள் தோன்றுகிறார்கள் என ஒரு சிலர் எண்ணுகின்றனர். அப்படியில்லை, தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவரே தலைவராவார். ஆகவே முதலில் தம்மை கட்டுப்படுத்த பழகிகக் கொள்ள வேண்டும். எமது வாழ்க்கையில் தோல்வி அடைய வேண்டிய விடயங்கள் போன்று வெற்றியடைய வேண்டிய விடயங்களும் ஏராளமாக உள்ளன. எமது மத்தியில் நிலவும் பொறாமை, காழ்ப்;புணர்ச்சி, போன்றவற்றை நாம் தோல்வியடையச் செய்ய வேண்டும்.
பின்தங்குவோர், எதிர்ப்புகளை கண்டு அஞ்சிவோர், முடியாதென்று எண்ணுபவர்கள், ஒருபோதும் தலைவராக முடியாது. தலைமைத்துவ பண்பு நாட்டை ஆளுபவர்களுக்கு மட்டும் இருக்க கூடாது. நாட்டின் அனைத்து மக்களிடமும் தலைமைத்துவ பண்பு காணப்பட வேண்டும். அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாங்கள் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குகின்றோம். எமது மக்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பு காணப்படுமாயின் எதிர்கால பரம்பரையினருககு நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் சேவைகளை ஆற்ற முடியும். அதற்கு நாட்டு மக்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பு காணப்பட வேண்டும்.
மேலும் புத்திசாதுரியமிக்க மாணவர் பரம்பரையொன்றை உருவாக்குவதற்காக கல்வி துறையில் இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத கடமைகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
சமூகத்தில் தலைமைத்துவ பண்பை உருவாக்குவதே தமது நோக்கம் தலைமைத்துவ பண்பு நாட்டை ஆட்சி செய்வோருக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்கள் மத்தியிலும் வளரும் போது நாட்டின் வெற்றிபயணம் இலகுவாக அமையுமென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, டளஸ் அலகப்பெரும, பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேமால் குணசேகர, சனத் ஜயசூரிய, தென் மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்திர, கல்லூரி அதிபர் ஹேமந்தி மாலா வணீகசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment