சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் இலங்கை அதிகாரிக்கு தொடர்பில்லை -அவுஸ்திரேலிய அரசு
இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் நாடுகடத்தபடுகின்றமை தொடர்ந்தும் நடைபெறுகிறது. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையுடன் ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
அவுஸ்திரேலியாவின் முன்னணி ஊடகமொன்று அந்நாட்டு புலனாய்வுப் பிரிவை ஆதாரம் காட்டி இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தது. எனினும், அந்நாட்டு அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும்,
இவ்வாறான விரும்பத்தகாத குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் காரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அதிகாரி இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டமைக்கு எவ்வித சாட்சியங்களும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment