மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது- இராணுவப் பேச்சாளர்
மனித உரிமை கண்காணிப்பகத்தின் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவை நம்பத்தகுந்தவை அல்லவென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு படையினரால் இலங்கை தமிழர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான 75 சாட்சியங்கள் அடங்கிய 140 பக்கங்களை கொண்ட அறிக்கை, மனித உரிமை கண்காணிப்பகத்தால் எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது.
தற்போது மூவரின் சாட்சியங்களை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவை அனைத்தும் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்.
வெளிநாடுகளில் வாழும் சில தீய சக்திகள் வேண்டுமென்றே ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கைப் படையினர் குற்றம் செய்தார்கள் என்று கூறுபவர்கள் இலங்கைக்கு வந்து இங்குள்ள தமிழர்களிடம் கேட்டு உண்மை நிலையை அறிய வேண்டும் என்றார்.
...............................
0 comments :
Post a Comment