பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி அடைந்தது இந்தியா!!
பெண்கள் உலக கோப்பை தொடரில் சூப்பர் சிக்ஸ் வாய்ப்பை இழந்த இந்திய அணி இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.7வது இடத்தை பிடிப்பதற்கான இப்போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தானுடன் மோதியது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை எடுத்தது. 193 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமிழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வெற்றிக்கு உதவிய இந்திய கேப்டன் மிதாலிராஜ் சிறந்த வீராங்கணையாக தெரிவானார்.
முன்னதாக இந்திய அணி இலங்கையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து சூப்பர் சிக்ஸில் நுழையும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை, 21 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை என அடுத்தடுத்து 2011,2012ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை பெண்கள் உலக கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டம் பெறுவதற்கும் கடும் பிரேயர்த்தனம் கொண்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சூப்பர் சிக்ஸில் கூட உள்நுழைய முடியாது தோல்வியை தழுவியது..
0 comments :
Post a Comment