நூதனசாலையாக மாற்றப் பெற்ற உல்லாச விடுதி- ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
திருகோணமலையில் அமைந்துள்ள பழைய ஒல்லாந்தர் கடற்படை ஆணையாளர் உல்லாச விடுதி நெதர்லாந்து அரசின் 75 மில்லியன் ரூபா செலவில் கடற்றொழில் வளங்களின் நூதனசாலையாக மாற்றியமைக்கப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துக்கொள்வதற்காக திருமலை செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி விடுதியை இன்று 3ஆம் திகதி முற்பகல் 11.00மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் கடற்படை அதிகாரிகள் நெதர்லாந்து தூதுவர் எல்.டப்.எம். பியட்டு உள்ளிட்ட பலர்; கலந்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment