பாதுகாப்பு குறித்து ஆஸி கிரிக்கெட் வீரர்கள் கேள்வி!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தங்களது பாதுகாப்பை ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதி படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஆஸி கிரிகட் வீரர்கள் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வரும் 4ம் திகதி நடக்க உள்ள நிலையில், அங்கு நேற்று மாலை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஆஸி கிரிகட் வீரர்கள், தங்களது பாதுகாப்பு குறித்து ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதும் ஆஸி கிரிக்கெட் வீரர்களின் எண்ணமாக உள்ளது.
இதை அடுத்து, ஹைதராபாத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் கிரிகெட் வேறு நகரத்துக்கு மாற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment