எங்களது ரேடார் கருவிகளை சீன இராணுவம் செயலிழக்கச் செய்கிறது- ஜப்பான் குற்றச்சாட்டு
சர்சைக்குரிய சென்காகு தீவு கடற்பகுதிக்குள்ளாக ஜப்பானிய ரேடார் கருவிகளை சீன இராணுவம் செயலிழக்கச் செய்து வருவதாக ஜப்பானிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் இச்சம்பவம் காரணமாக பாரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள சென்காகு தீவு ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் சீனாவும் டையோயூ எனப்படும் இந்த தீவு எங்களுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக வல்லரசுகளான சீனா, ஜப்பான் இடையே பிரச்சினை ஏற்பட்டு, உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க இருநாட்டு வெளியுறவு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரச்சினைக்குரிய இந்த தீவுப்பகுதியில் சீன கடற்படை கண்காணிப்பு கப்பல்கள் இன்று வந்ததாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
தங்களின் நீர் எல்லைகளில் சீனா அத்துமீறி நுழைந்து, கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் உள்ள ரேடார் கருவியை செயல் இழக்கச் செய்கிறது என்றும் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
0 comments :
Post a Comment