ஜயோ நான் கத்தினேன் பொலிஸாரே பிடியுங்கள் என்று ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்- சரவணபவான் எம்.பி
யாழ். தெல்லிப்பளையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்த இப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு வந்த மூன்று பேர் 'எல்லாம் முடிஞ்சது போ.. போ' எனக் கூறிய வண்ணம் வந்தனர்.
எதிர்ப்பாராத இச்சம்பவத்தினால் நாமும் பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். பொதுமக்களை விரட்டத் தொடங்கிய அவர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் பத்திரிகையாளர்களின் கமெராக்களையும் உடைத்தனர்.
அவர்களைக் கைது செய்யுமாறு அருகில் இருந்த பொலிஸாரிடம் கோரினேன். எனினும் அவர்கள் உடனடியாகத் தப்பிச் சென்று வாகனமொன்றில் ஏறிச் சென்றுவிட்டனர்.
இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள். என்றார்.
1 comments :
சரவணபவான் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் அ வர்தான் மகிந்தவின் நல்ல நண்பர். அவருக்குத்தான் தெரியும் யார் யார் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று காரணம் யாழ் பாணத்து மக்களுக்கு பத்திரிகையில் ஒரு செய்தியை சொல்லிவிட்டு புலனாய்வுப் பிரிவுக்கு உண்மைத்தகவல்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு சொல்பவரும் அவரே.
Post a Comment