பௌத்த பிக்குமார் அரசியலில் ஈடுபடக் கூடாது!
பௌத்த பிக்குகள் அரசாங்கத்தை நிருவகிப்பதற்கு மாத்திரம் உபந்நியாசங்களும், உபதேசங்களும் செய்யக்கடவது என்றும், அரசியலில் ஈடுபடுவது அகௌரவமாகும் என்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் குறிப்பிடுகிறார்.
சில பிக்குமார் தெருக்களில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும் உசிதமற்றது என்றும், மக்களுக்கிடையே சமாதானத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்காகவே நாம் செயற்பட வேண்டும் என்றும் மகா நாயக்க தேரர் குறிப்பிட்டிருக்கிறார்.
முதலீட்டுப் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா மகாநாயக்க தேரரை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment