இலங்கை அரசாங்கம் கண்டனங்களை கவனத்தில் கொள்வதில்லை- நவிப் பிள்ளையின் பரபரப்பு கருத்து
எந்த கண்டனங்களையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோது குற்றம் சுமத்தியுள்ளார்.சண்டே லீடர் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது. இதற்காக நாள்தோறும் சர்வதேசத்தினால் கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும் அதனை இலங்கை அரசாங்கம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
1 comments :
எருமை மாட்டின் மேல் மழை பெய்கிறது அல்லது செவிடன் காதில் சங்கு ஊதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சஞ்ஜே.
Post a Comment