பள்ளிவாசல் சொத்துக்களாக றப்பர் முத்திரையும் இரு திறப்புக்களும்
வெலிகாமம் - மதுராப்புர மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் தெரிவு இன்று (8) வெள்ளிக்கிழமை, ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
நிருவாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தை நடாத்திவைப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த வாஸில் அஹமட் ஆலோசனையில் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு அல்ஹாஜ் எம்.எஸ்.எம். இர்ஷாத் தலைமை தாங்கியுள்ளார்.
நிகழ்வில் அல்ஹாஜ் எம்.ரீ.எம். ஹஸீப் (தலைவர்), இஸ்மாயில் எம். பைரூஸ் (செயலாளர்), எம்.என்.எம். அஜ்மல் (பொருளாளர்) ஆகியோர் நிருவாக சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நிருவாக சபை உறுப்பினர் அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். ரஹ்மத்துல்லாஹ், பள்ளிவாசலின் சொத்துக்கள் என எல்லோர் முன்னிலையிலும் பள்ளிவாசலின் பழைய றப்பர் முத்திரை ஒன்றையும், அறிவித்தல் பலகையின் இரண்டு திறப்புக்களையும் கொடுத்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். பணமாக ஒரு ரூபா கூட வழங்கப்படவில்லை என நம்பத் தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
பள்ளிவாசல் கணக்குப் பற்றி அவரிடம் நியமிக்கப்பட்ட நிருவாகிகள் வினாதொடுத்தபோது, ஏலவே வக்பு சபைக்கு கடனாளிகள் எனவும், கந்தூரி வருமானம் பிறிதொருவர் கைவசம் இருப்பதாகவும், அதனை அவர்கள் பள்ளிவாசல் புனர்நிர்மாணத்திற்காக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
2 comments :
Go back to Saudi and do there your things.
ITHAI NAANGKA PAARTTHUKKOLLUROM UNGKALUKKU EAN VAITRERICHCHAL NEENGA KOVIL UNDIYALAI PAARUNGKAL
Post a Comment