பாடசாலை மாணவியின் காலை துளைத்த ஈட்டி
தலல்ல - வடக்கு பிரதேச பாடசாலை ஒன்றில் விளையாட்டு போட்டி பயிற்சியின் போது எறியப்பட்ட ஈட்டி மாணவி ஒருவரின் காலில் துளையிட்டதை அடுத்து மாணவி உடனடியாக கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் ஈட்டி அகற்றப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி ஒருவரின் காலில் துளையிட்டு நின்ற ஈட்டியை கராபிட்டி வைத்தியசாலை வைத்திய குழு சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளதுடன் குறித்த மாணவி தொடர்ந்தும் கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
0 comments :
Post a Comment