சவூதியில் செயற்படும் சி. ஐ. ஏ. ஆளில்லா விமானத்தளம் பற்றிய தகவல்கள் அம்பலம்!
அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. சவூதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளில்லா விமானத்தளத்தை செயற்படுத்தி வந்தது விபரம் அம்பலமாகியுள்ளது. யெமன் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் அரேபிய தீபகற்பத்திற்கான அல்-கொய்தா உறுப்பினர்களை வேட்டையாடவே சி. ஐ. ஏ. சவூதி அரேபிய தளத்தை பயன்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் பிறந்த அல்கொய்தா முன்னணித் தலைவர் அன்வர் அவ்லாக்கி மீதான ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா சவூதி அரேபிய தளத்திலிருந்தே செயற்படுத்தியுள்ளதாகவும் அன்றைய தினம் தொடக்கம் இந்த ஆளில்லா விமானத் தளம்பற்றி அமெரிக்க ஊடகங்களுக்கு தகவல் தெரிந்திருந்த போதும் அதனை வெளிப்படுத்தாது இருந்த நிலையில் இந்த ஆளில்லா விமானத் தளம் குறித்த தகவலை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாது இந்த தளத்திலிருந்து முதல் தாக்குதலை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தரவிலேயே யெமனில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த நாளிதள் குறிப்பிடப்பட்டுள்ளது. யெமன் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு அந்நாட்டு அரசிடமிருந்து அமெரிக்கா எந்த ஒரு அனுமதியையும் எந்த ஒரு சமயத்திலும் பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment