சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் விரும்பும் தோனி!!
ஆஸ்திரேலிய கிரிகெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.முதல் போட்டி சென்னையில் வருகிற 22ம் திகதி தொடங்குகிறது. சென்னை, ஹைதராபாத், மொகாலி, டெல்லி ஆகிய 4 இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த 4 ஆடுகளத்தையும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கவேண்டும் என்று, ஆடுகள வடிவமைப்பாளர்களுக்கு பிசிசிஐ மூலம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிகெட் அணியின் முதல் 2 டெஸ்ட்டுக்கான, இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில், இளம் வீரர்கள் ஆதிக்கம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்திய சூழ்நிலைக்கு புதியவர்கள். பொதுவாக இந்திய ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இங்கிலாந்து தொடர் இந்தியாவுக்கு சரிவை கொடுத்தது அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதும் எஞ்சிய போட்டிகளுக்கும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கவேண்டும் என்று தோனி கேட்டுக்கொண்டார். அவருடைய விருப்பம் பிசிசிஐயால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.
ஆனால், இது எதிர்விளைவை ஏற்படுத்தி இந்திய அணையை தோல்வியடைய செய்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்வான், பனேசர் ஆகியோர் இந்திய ஆடுகளத்தை சாதகமாக பயன்படுத்தி விக்கெட்டுக்களை சாய்த்தனர். இங்கிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
ஆனால் ஆஸ்திரேலியத் தொடரில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணியில், அனுபவம் குறைந்த பந்து வீச்சாளர்கள், நேதன் லான், சேவியர் டுஹெர்டி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சு பலமாக உள்ளது.
அஸ்வின், ஓஜா, ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோர் எதிரணி வீரர்களை தினறடிக்க கூடியவர்கள் . ஆனால், இப்போதைய நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள், இவர்களை திணறடிக்க கூடியவர்கள் என்று நம்பப் படுகிறது. சமீபத்தில் சென்னையில் ஆடுகள வடிவமைப்பாளர் கூட்டம் நடந்தது. அவர்களிடம் பேசிய பிசிசிஐ உயர் அதிகாரி, இந்திய கேப்டன் தோனி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தேவை என்று விரும்புகிறார். எனவே 4 ஆடுகளத்தையும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க வேண்டும் என்று, கூறியதாகத் தெரிகிறது. எனவே போட்டி நடைபெறும் 4 ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இதனை பிசிசிஐ மறுத்துள்ளது, பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்தலே கூறுகையில், "ஆடுகளம் வடிவமைப்பாளர்களின் விருப்பத்திற்கு இணங்கவே அமைக்கப்படும். அதில் எங்களது தலையீடு இருக்காது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், ஐபிஎல் போட்டிக்கான ஆடுகளம் குறித்தே ஆலோசிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment