யாழ்ப்பாணத்தில் கடற்படை வாகனம் மோதி ஒருவர் பலி
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் வாகனமும் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில் சில்லாலை பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் அன்ரனிராஜா (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment