விபச்சாரம் கொள்ளைகளுடன் தொடர்புடைய உயர்தர மாணவன் கைது! பொலிஸார் வியப்பில்...!
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உயர்தரம் பயிலத் தயாராகும் பாடசாலை மாணவன் ஒருவர் விபச்சாரம், கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது பொலிஸாருக்கு பயங்கர வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அவரிடமிருந்து பெறுமதியான பொருடக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பில் பிரபல்யமான பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் ஒருவரை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான மடிகணினிக்கான உபகரணங்கள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் ரம்போ வகை கத்தி, கடற்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கி ஆகியன குறித்த மாணவனிடமிருந்து பொலிஸாரால் மீடக்கப்பட்டுள்ளன.
குறித்த மாணவன் ரத்மலானை,தெஹிவளை மற்றும் கல்கிஸை போன்ற பகுதிகளில் இடம் பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்கின்றபோது அவரிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட ஆணுறைகளை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் விபசாரத்தில் ஈடுபடுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment