வெலிகமையில் கனேடிய பெண் விரிவுரையாளரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி
ஜப்பான் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியும் 42 வயது கனடா நாட்டுப் பெண்மணியொருவர், வெலிகம பெலேனவிலுள்ள உல்லாச விடுதியொன்றில் தங்கியிருக்கும்போது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற விடுதிப் பணியாளரை விசாரிப்பதற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பெண்மணி விடுதியில் தங்குவதற்காக வந்த நாளுக்கு மற்றைய நாள் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் அந்த அறையின் யன்னலினூடாக உள்ளே சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட முனைந்துள்ளார்.
அந்தநேரம் அந்த வெளிநாட்டுப் பெண்மணி பெருஞ்சத்தத்துடன் ஓலமிட, அந்த விடுதியின் உரிமையாளும் அங்கு வந்திருக்கின்றார்.
அங்கு பலரும் கூடும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் அவ்விடத்தை விட்டும் ஓடிச்சென்றிருக்கிறார். கல்கிசை விடுதியொன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுகின்ற 19 வயதுடைய சந்தேக நபர், விடுதியின் குறித்ததொரு சமையல் பணிக்காக வந்து தங்கியிருந்தவராவார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment