தமிழ்ப்பாடப் புத்தகத்திலிருந்து சிலப்பதிகாரத்தை நீக்குங்கள் பொற்கொல்லர்கள் போர்க்கொடி
தமிழக அரசின் பாடத் திட்டத்தில் எங்களை அவமானப்படுத்தும் விதத்தில் வார்த்தைகள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும் என்று பொற்கொல்லர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 32 மற்றும் 34ஆம் பக்கங்களில் பொற்கொல்லர் இனத்தைக் கேவலப்படுத்துவது போன்ற வரிகள் வந்திருக்கின்றன. சிலப் பதிகாரம் பற்றி வரும் அந்தப் பாடத்தில், காற்சிலம்பை களவாடிய பொற்கொல்லன் என்கிற வரிவருகிறது. இதை பாடசாலை பிள்ளைகள் எல்லாம் சத்தம்போட்டுப் படிக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, பாடசாலை படிக்கும் எங்கள் இன மாணவர்களிடம், உங்க சாதிக்காரன்தான் திருடினான் என்று கிண்டல் செய்கிறார்கள். இதனால் எங்கள் மாணவர்கள் பாடசாலைக்கு போகவே தயங்குகிறார்கள் என்று அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.பி. பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
ஆகவே பாடசாலை பாடத்திலிருந்து சிலப்பதிகாரத்தை நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்க தீர்மானித் திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாகி கொன்றவர் தனு என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அவரது சாதியையா குறிப்பிடுகிறார்கள். இதில் (சிலப்பதிகாரம்) மட்டும் தவறு செய்தவன் பெயரைச் சொல்லாமல் அவன் இனத்தை ஏன் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறிய கருத்துக்களை நீக்கக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், சிலப்பதிகாரத்தையே நீக்கக் கோரி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர் தமிழ்நாட்டு பொற்கொல்லர்கள்.
0 comments :
Post a Comment