ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது ஆஸ்திரேலியா!!
இந்திய ஏ அணிக்கும் - ஆஸ்திரேலிய அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடிந்துள்ளது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 451 ஓட்டங்களை எடுத்தது. கௌதம் கம்பீர் 112 ஓட்டங்களையும், திவாரி 129 ஓட்டங்களையும் எடுத்தனர். பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
கேப்டன் ஷேர்ன் வாட்சன் 84 ஓட்டங்களையும், கீப்பர் ஷேர்ன் வேட் 44 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் சக்சேனா 4 விக்கெட்டுக்களையும் துர்வ் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஃபலோவன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 55 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்ளை எடுத்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா சார்பில் துர்வ், சக்ஸேனா தலா 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்.22 ம் திகதி தொடங்குகிறது.
0 comments :
Post a Comment