யாழ் பல்கலை மாணவர்கள் நாளை விடுதலை-ஜனாதிபதி
வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை (13.02.2013) புதன்கிழமை விடுதலை செய்யப்படுவர் என யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
இதன்போது யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர் இதனை தொடர்ந்து பெற்றோரின் வேண்டுகோளிற்கினங்க தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment