‘பொறுத்திருங்கள்’ என்கிறார் ஹக்கீம்
சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதம நீதியரசருடன் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவொன்று எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கிறார்.
பெருந்தொகையான மாணவர்கள் அமைச்சரவையில் தன்னைச் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்ததாக கூறிய அமைச்சர், சட்டக் கல்வி ஆணைக்குழுவின் தலைவராகிய பிரதம நீதியரசருடன் தான் இது பற்றி உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.
புதிய பரீட்சையை நடைமுறைப்படுத்த காலக்கெடு அவசியமென்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், சட்டக் கல்வி ஆணைக்குழுவுடன் இது தொடர்பில் கலந்துறவாடி முடிவொன்று எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்த முடிவு வரும்வரை சற்றுப் பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் ஹக்கீம் கேட்டுக்கொள்கிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment