அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள் சிக்கலை தோற்றுவிக்கும்!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் வெற்றியீட்டினால் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்த கூடுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் பிரவேசிப்பதனை தடுக்க இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதுடன் பலவந்தமான முறையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இனி வருற்காலத்தில் இலங்கையில் இருந்து வரும் சகல புகலிடக் கோரிக்கையாளர்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதாக இருந்தால் இலங்கை, அவுஸ்திரேலிய ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் மட்டுமே இவர்களை திருப்பி அனுப்பி வைக்க முடியும் என அவுஸ்திரேலிய மெக்யூரி பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் நெடலி கெலீன் தெரிவித்துள்ளதுடன் புகலிடம் கோரி வருபவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளாது நேரடியாக படகுகளை திருப்பி அனுப்பி வைப்பது சர்வதேச சட்மீறலாகும் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய சட்டத்திருத்தங்கள் பாரியளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்
அவுஸ்திரேலிய அரசின் புகலிடச் சட்டங்களின் அடிப்படையில் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக திருப்பி அனுப்பி வைக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றியீட்டினால் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைப்பது தொடர்பில் புதிய மற்றங்கள் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அவுஸ்திரேலியாவில் பரவலாக எதிர்பார்கபடுகிறது.
0 comments :
Post a Comment