இந்திய சீமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரானார் எம்.எஸ்.தோனி !!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்தியா சீமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராகியுள்ளதும் கார்ப்பரேட் தொடரில் விளையாடவுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எதிர்வரும் பெப்.6ம் திகதி தொடங்கும், இரானி கோப்பை போட்டிகளில் இந்திய முன்னணி வீரர்கள் பலர் பங்குபெறுகின்ற போதும் தனக்கு ஓய்வு தேவை என கூறி வழமை போன்று இதில் பங்கேற்காது தவிர்த்துக்கொண்டார் எம்.எஸ்.தோனி.
எனினும், பெப்.1-8 வரை நடைபெறும் கார்ப்பரேட் டிராபி தொடரில் இந்தியா சீமெண்ட்ஸ் அணி சார்பில் தோனி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு ஓய்வு வேண்டும் என கூறி இரானி கோப்பையிலிருந்து விலகி கார்பரேட் டிராபி தொடரில் மட்டும் பங்கேற்பது ஏன் என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், இந்தியா சீமெண்ட்ஸ் நிறுவன தலைவராகவும் இருக்கும் சினிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளராகவும் உள்ளார்.அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி வந்ததை அடுத்து, இந்திய டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து தோனியை இடைநீக்கம் செய்யக்கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும் சீனிவாசனின் நேரடி தலையீட்டினால் தோனி கேப்டனாக தொடர்ந்து நீடிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தோனி ஒருவேளை கார்ப்பரேட் தொடரில் விளையாடுவதை தவிர்த்தால் அஷ்வின் இந்தியா சீமெண்ட்ஸ் அணியை வழிநடத்திச்செல்வார் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தோனி டுபாயில் வைத்து, தனது பெயரில் Perfume ஒன்றை அறிமுகப்படுத்தினார். '7 By MS Dhoni' என பெயரிடப்பட்டுள்ள Perfume, இந்தியாவில் முதன்முறையாக ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை கொண்டு அறிமுகமாகிறது. இதன் மூலம் தோனியும் சர்வதேச அரங்கில் தனது வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்த தொடங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment