யாழ்.ஊர்காவற்றுறையில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
ஊர்காவற்றுறை வேணக் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவன் குளத்தில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த பா.நிறோஜன் வயது 18 என்றவரே உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் யாழ்போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment