குருநகரில் குடும்பத்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்- காயமடைந்தவர் வைத்தியசாலையில் ?
குடும்பஸ்தர் மீது படையினர் மேற்கொண்டத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்த போதே குடும்பஸ்தர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் மீது 10 இராணுவத்தினரே பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த எட்வேட் நியூட்டன் (வயது 40) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment