பெண்களின் வன்முறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பேரணி
யாழ்ப்பாணத்தில் பெண்கள் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை தடுக்கக் கோரி விழுதுகள் நிறுவன அனுசரணையுடன் யாழ்.மாவட்ட பெண்கள் சமாசத்தினால் கண்டனப் பேரணியென்று நடாத்தப்பட்டது.இக்கண்டப் பேரணியானது நேற்று பிற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை.வீதி வழியாக சட்டநாதர் கோயிலடியிலுள்ள திவ்ய ஜீவன சங்க மண்டத்தில் சென்று நிறைவடைந்தது.
இக்கண்டப் பேரணியில் 100 கோடி பெண்கள் எழுக, குடும்ப வன் முறையை ஒன்றிணைந்து தடுப்போம், வேண்டும் வேண்டும் மகளீர் பேருந்து வேண்டும், நாம் நாளொன்றிற்கு ஆயிரம் ரூபா படி மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவும் வருடத்திற்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வேலையை இலவசமாக தருகிறோம், சிறுமிகளை ஏன்? சிதைக்கிறீர்கள், ஆசானே பிள்ளைகள் மீதான உம் நோக்கு கல்வி நோக்காக மட்டும் இருக்கட்டும், சட்டங்களை கடுமையாக்குங்கள் உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
0 comments :
Post a Comment