இலங்கையில் பெய்யும் சிவப்பு மழைக்கு காரணம் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன - நாசா நிபுணர்கள்
பொலநறுவை - அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழை என்பன பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக இவை தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள் இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நவீன தொழிநுட்ப உபகரணங்களை பயன்படுத்தி சோபோன் மற்றும் காடிஸ் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய குறித்த விண்கல் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிர்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிந்து போன உயிரினங்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் இவை பூமிக்கு வெளியில் அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புகழ்பெற்ற நட்சத்திர ஆய்வாளரான ஸ்ரீமத் பெஃட் ஹொயில் முன்வைத்துள்ள பென்ஸ்பர்மியா அடிப்படை கொள்கை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள நாசா நிபுணர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் கடந்த 500 வருடங்களுக்குள் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் விண்கல் பகுதிகள் வீழ்த்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் பொலநறுவை அரலகங்வில பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற விண்கல் பாசானத்தில் வேற்று கிரகஉயிரினங்கள் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அத்துல சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment