உங்கள் மொழியை பாதுகாப்பது தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள்!
மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் சமூக ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை வவுனிய, மன்னார், மற்றும் யாழ்ப்பாணம், மாவட்ட மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் இணைப்பாளர்களுக்கும் இடையே அரச கரும மொழி கொள்கைத்திட்டம் தொடர்பாக கொள்கை மாற்றம் பற்றிய ஓன்றுகூடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மொழிச் சங்கங்களின் தன்மை பற்றியும் மாதாந்த அறிக்கையிடல் பற்றியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பாதாகைகள் இடல் வேண்டும் எனவும் மொழி உரிமை மீறப்படுமிடத்து புகார் தெரிவிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
மொழி உரிமை மீறப்படும் போது 1956 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment