ஒற்றைத் தலைவலி வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும்
கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டுவருபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர் சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.இருந்தபோதும் இவர்கள் எல்லோருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.
சாதாரண தலைவலியானது.தடிமன், மூக்கடைப்பு, மனப்பதற்றம், காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு.
ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அவைபோன்ற வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும். அந்நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதறவைக்கக் கூடிய கடுமையான நோயாகும். தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கைவிட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.இதன்போது வைத்திய உதவிகளை பெற்றுக்கொள்வது உடலுக்கும் மனத்திற்கும் உகந்ததாகும்.
0 comments :
Post a Comment