வெலிக்கந்தை காட்டுப்பகுதியில் முன்னாள் புலிகள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்! இருவர் பலி.
வெலிக்கந்தை பகுதியில் ஆயுதமுனையில் கொள்ளை அடிக்க முற்பட்ட முன்னாள் புலிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுவினர் கடந்த நான்கு மாதங்களாக வெலிக்கந்தை, வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
புலிகளியக்கம் ஒழிக்கப்பட்டபின்னர் புனர்வாழ்வுக்கு செல்லாது பிரதேசத்தில் ஒழிந்திருந்த இவர்கள் தற்போது குழுவாக இணைந்து கொள்ளைகளில் ஈடுபட . ஆரம்பித்துள்ளனர்.
இன்று வெலிக்கந்தை பிரதேசத்தில் வாகனமொன்றை மறித்து ஆயுதமுனையில் கொள்ளை அடிக்க முற்பட்டபோது காரிலிருந்தவர்கள் பொலிஸ் அவசர சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அங்கு விரைந்த பொலிஸார் மீது முன்னாள் புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு பொலிஸார் தாக்கியபோது ஆயுததாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இக்கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வெலிகந்த கிம்புலாகல காட்டுப்பகுதயிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
மட்டக்களப்பு மன்னம்பிட்டிய பகுதியில் காரைக் கடத்திக் கொண்டு செல்ல முற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் காயமடைந்த வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில் தப்பியோடியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடன் இன்னும் இருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதோடு அவரிடமிருந்து ரீ-56 ரக துப்பர்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment