சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் வேட்பாளரும் ரணிலும் சந்திப்பு.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அடுத்த தலைமைத்துவத்திற்கு போட்டியிடவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது சட்டத்துறை சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் எதிர்கட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் டிரந்த வலலியத்த.
மக்களுக்கும் சட்டத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் சட்டத்துறை சார்ந்த பிரச்சினைகளை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்று துறையுடனும் எதிர்கட்சி தலைவருடனும் கலந்துரையாட வேண்டுமெனவும் வலலியத்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்தவிற்கு நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் சங்க தேர்வுக்காக ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment