யாழ்.மக்கள் மத்தியில் இன மோதலை ஏற்படுத்த ரணில் குழு முயற்சி- கோத்தபாய தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன மோதல்களைத் தூண்ட முயற்சித்து வருகின்றனர். யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடாத்த ரணில் குழு ஆயத்தமாகி வருகின்றனர் இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் படையினரும் அரசாங்கமும் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை மறந்து ரணில் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
தந்திரோபாய மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்;, அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை.
வன்னி முன்னரங்கப் பகுதிகளில் படையினர் புலிகளுக்கு எதிராக போராட்டத்தை நடாத்தமலிருந்தால் ரணில் தரப்பினர் தெல்லிப்பழையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்க முடியாது.
ரணில் நண்பரான சார்லி மகேந்திரனின் வீட்டை புலிகள் பயன்படுத்தி வந்தார்கள், அந்த வீட்டை இராணுவத்தினர் பின்னர் பயன்படுத்தினார்கள் எனவும், குறித்த பூர்வீக வீட்டை மீட்டுத் தருமாறு ரணில் தம்மிடம் கோரியதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது பணிப்புரைக்கு அமைய படையினர் சார்லி மகேந்திரனின் பூர்வீக வீட்டை விட்டு இராணுவத்தினர் வெளியேறியதாகவும், புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் மூலம் ரணிலும் அவரது சகாக்களும் பல நன்மைகளை அடைந்துள்ளனர். என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment