யாழ் கொழும்பு பஸ் சேவையில் பல மோசடிகள்.
வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளிலிலுருந்த ஆரம்பிக்கும் யாழ்ப்பாணம், கொழும்பு பஸ் சேவைகளில் முறையற்ற வகையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன் இம்மோசடிகளை கட்டுப்படுத்தும்பொருட்டு அதிகாரிகளை ஈடுபடுத்த, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதேநேரம் ஒரு பஸ் வண்டிக்கான போக்குவரத்து அனுமதியை பெற்று, பல பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தும், பஸ் உரிமையாளர்களின்
அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சி.பி. ரட்னாயக தலைமையில் விசேட சந்திப்புபொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள், கேள்வி மனு உரிமையாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தின்போது, பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக
ஆராயப்பட்டுள்ளன.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ள பஸ் உரிமையாளர்கள் அனுமதிப்பத்திரமின்றி, பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தினால், உடனடியாக அந்த அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யுமாறு, அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தனவை பணித்தார்.
0 comments :
Post a Comment