வடகொரியாவின் மிரட்டலுக்கு அடிபணியாது அணு ஆயுதம் மூலம் அமெரிக்கா பதிலடி!
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து அணுஆயுதம் ஏந்தும் நீர் மூழ்கிக் கப்பல் பயிற்சிகளை மேற்கொண்டன. ஜப்பானின் கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கடற்பயிற்சியில் நீர் மூழ்கியை கண்டறிவது, அணுஆயுதங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட போர்ப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வடகொரியா கடந்த டிசம்பர் மாதம் தொலைதூர ராக்கெட் ஒன்றை ஏவியதனால் அமெரிக்கா சில தடைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து வட கொரியா தினம்தினம் மிரட்டல் விடுத்து வந்த இந்த சூழலில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் வடகொரியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்பயிற்சியின் எதிரொலியாக வட கொரியாவும் விரைவில் தனது மூன்றாவது அணுஆயுத சோதனையை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 comments :
We have heard about woodpeckers story.
Post a Comment