வடக்கு,கிழக்கு தமிழ் மக்களுக்காக உதயமாகியது“ தமிழ் தேசிய முன்னணி” (படம் இணைப்பு)
தமிழ் மக்களுக்காக புதிதாக உதயமாகிறது 'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி என கூறி வவுனியாவின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் நேற்று(25.02.2013) ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் “வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய்”, “அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளினதும் புத்தியீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய்” என பலவாசகங்கள் எழுதப்பட்டுள்ளதடன் இந்தப்புதிய 'தமிழ் தேசிய முன்னணி' கட்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 024 2226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்கங்களும் இந்த சுவரொட்டிகளில் இடப்பட்ட நிலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment