கிராம சேவகர் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
அரியாலைக் கிழக்கு J/90 கிராமசேவகர் எஸ்.விஜிதன் இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டனர். இவ் ஆர்ப்பாட்டம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னர் நடைபெற்றது.கிராம சேவகர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டன.
இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நல்லூர் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment