ஜெசிந்தாவுக்குப் போலி தொலைபேசி அழைப்பு விடுத்த அறிவிப்பாளர் பணிக்குத் திரும்பினார்.
பிரிட்டன் இளவரசி கேட் வில்லியம்ஸ் கர்ப்பமாக சிகிச்சை பெற்ற பிரபல லண்டன் வைத்தியசாலையில் மருத்துவத் தாதியாக கடமை புரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெசிந்தா எனும் மருத்துவதாதி அண்மையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது. போலித் தொலைபேசி அழைப்புக்கு இளவரசியின் உடல் நிலை குறித்துத் தகவல் வழங்கிய குற்ற உணர்வால் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவருக்குப் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் 2Day FM ஐச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர்கள் இருவரும் கூட மனமுடைந்து தமது பணிக்குத் திரும்பாமல் இருந்தனர். எனினும் இப்போது fake தொலைபேசி மேற்கொண்ட மிக்கேல் கிறிஸ்டியன் மற்றும் மெல் கிரெயிக் எனும் இரு அறிவிப்பாளர்களில் மிக்கேல் மறுபடி பணிக்குத் திரும்பியுள்ளார்.
இது பற்றி குறித்த வானொலி நிறுவனமான Austereo இன் தலைவர் Rhys Holleran என்பவர் கருத்துரைக்கையில், 'மிக்கேல் மறுபடி பணிக்குத் திரும்பியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜெசிந்தாவின் மரணம் தற்செயலானது. இதற்கு யார் மேலும் குற்றம் சாட்ட முடியாது. மிக்கேல் போன்ற திறமையான அறிவிப்பாளர்கள் குற்ற உணர்வால் தமது பணியைப் புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது' எனத் தெரிவித்தார். இவர் மேலும் கூறுகையில் இன்னொரு அறிவிப்பாளரான மெல் கிரெயிக் உம் நேரம் சரியாக வரும்போது பணிக்குத் திரும்பி விடுவார் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் வழக்கறிஞர்கள் இந்த போலித் தொலைபேசி அழைப்பை விடுத்த அவுஸ்திரேலிய DJ க்கள் இருவர் மீதும் எந்த ஒரு தண்டனையோ அல்லது நஷ்ட ஈடோ விதிக்கப் படாது எனத் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை இரு குழந்தைகளுக்குத் தாயான ஜெசிந்தா சல்தன்ஹா இன் மரணத்துக்கு சந்தேகத்தின் பெயரில் வழக்குப் பதியவோ யாரையும் கைது செய்யவோ அவசியமான மரண விசாரணையை பிரிட்டன் அரசு இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment