Wednesday, February 13, 2013

ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்தம் நீக்கம் : அதிர்ச்சியில் இந்தியா!!

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து மல்யுத்த போட்டிகள் நீக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சுஷில்குமார் மற்றும் யோகேஸ்வர தத் போன்ற ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியர்களுக்கு வென்று கொடுத்தவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அவர்களின் பயிற்சியாளர்களான மஹாபலி சப்தல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இந்திய விளையாட்டுக்களுக்கு இது நிச்சயமாக ஒரு சோக தினம். மல்யுத்தத்தை ஒலிம்பிக்கிலிருந்து நீக்கியது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தானா ஒலிம்பிக் சங்கம் கடைப்பிடிக்கும் புரதான பண்புகளில் ஒன்று? இது நிச்சயம் உலக மல்யுத்த விளையாட்டுக்கு கறுப்பு தினம் தான்.

உடனடியாக இந்திய அரசு மற்றும் விளையாட்டு துறை என்பன இது தொடர்பில் அக்கறை எடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் பேச வேண்டும். மீண்டும் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தை சேர்க்க ஆவண செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மல்யுத்தம் இப்போது உலக அளவில் மிக பிரசித்தம் பெற்றுள்ளது. டி.ஆர்.பியில் கூட முன்னிலையில் உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற தேசங்கள் கூட இதில் கவனம் செலுத்துகின்றன. இந்த நிலையில் ஏன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த முடிவை எடுத்தது என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் தெரிவிக்கையில், இது நிச்சயம் வேதனைக்குரியது. எதிர்காலத்தில் மல்யுத்தத்தை தமது முழுநேர பயிற்சியாக எடுத்து கொள்ள தயாராகிவரும் இளம் வீரர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களுக்கு இந்த விளையாட்டில் வளமான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகும் போல தெரிகிறது என அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா இதுவரை மல்யுத்தத்தில் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் சுஷில் குமார் வெண்கல பதக்கமும், 2012 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி பதக்கமும் வென்றார். யோகேஸ்வரும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

மல்யுத்தத்திற்கு பதிலாக ஒலிம்பிக்கில், புதிய ஐந்து விளையாட்டுக்கள் உள்ளடக்கிய மார்டன் பெண்ட்த்லான் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டுள்ளது.

வாள் சண்டை, குதிரை பந்தயம், நீச்சல், ஓட்ட பந்தயம் மற்றும் துப்பாக்கிச்சுடுதல் என்பன இந்த புதிய ஐந்து விளையாட்டுக்களில் இடம்பெற்றுள்ளன. எனினும் ஒலிம்பிக்கில் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வரும் புராதன விளையாட்டான மல்யுத்தம் நீக்கப்பட்டது பெரும்பாலானோரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. 1896ம் ஆண்டிலிருந்து மல்யுத்தம் இடம்பெற்று வந்தது.

எனினும் மல்யுத்தத்தை மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. அதாவது 2020 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும் என ஏற்கனவே பேஸ்பால், கராத்தே, ஸ்குவாஷ், ரோலர் விளையாட்டு, மலையேற்றம், வேக்போர்டிங், வுஷூ ஆகிய விளையாட்டுக்கள் சார்பில் விண்ணபிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் தற்போது மல்யுத்தமும் இணைந்து கொண்டுள்ளது.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் மே மாதம் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கபப்ட்டு, செப்டெம்பர் இறுதியில் மல்யுத்தத்திற்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படு முடிவு வெளியிடப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com