Wednesday, February 13, 2013

கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம்!!

நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார்.இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர் அதிகளவு கொக்கா கோலா உட்கொண்டமையே என இப் பெண்மணியின் உடலைப் பரிசோதித்த பிரேத பரிசோதகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதாவது மனித உடலில் சேரக் கூடிய காஃபின் (Caffeine) ஐ விட இரு மடங்கும், நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை அளவை விட 11 மடங்கும் இவர் உடலில் சேர்ந்தமையாலேயே இருதயப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 8 பிள்ளைகளின் தாயான இவர் உடல் நலக் குறைவால் பல வருடங்களாகப் பாதிக்கப் பட்டிருந்தார். இவரின் மரணத்துக்குப் பின்னர் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது, ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கோலா குடித்ததால் அவரது உடலில் 1Kg சர்க்கரையும், 970mg caffeine உம் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் கொக்கோ கோலா நிறுவனம் சமீபத்தில் தனது உற்பத்தியான கோலா தான ஹாரிஸ் இன் மரணத்துக்குக் காரணம் என யாராலும் 100% வீதம் நிரூபிக்க முடியாது என மறுப்புரை தெரிவித்துள்ளது. மேலும் தனது பானத்தை அளவுக்கதிகமாக உட்கொண்டு அதற்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புக்குத் தனது நிறுவனம் பொறுப்பாக முடியாது எனவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது எனவும் தடாலடியாகத் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com