மெக்சிகோவில் 9 வயது சிறுமி பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்!(படங்கள் இணைப்பு)
மெக்சிகோவில் 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ளது குவாடலாஜரா நகரில் வசிக்கும் ஒரு 9 வயது சிறுமிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்ததுள்ளால் இந்த பனுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்களது கேள்விக்கு பதிலளித்த ஜலிஸ்கோ போலீஸ் செய்தித் தொடர்பாளர் லினோ கோன்சலீஸ் இந் சிறுமியும் பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவனும் நெருங்கி பழகி உள்ளனர் இதனாலையே இந்த சிறுமி கருவுற்று இருப்பதாக தெரிவித்தார்.
அது குறிதது சிறுமியிடம் விசாரித்த போது, அவன் என்னுடைய பாய் பிரண்ட் என்று சிறுமி குறிப்பிட்டுள்ளாள் இதே வேளை சிறுமி கருவுற்ற நாளிலிருந்து அந்த பக்கத்துவீட்டு சிறுவனையும் காணவில்லை. தற்போது சிறுமியும் அவள் பெற்றெடுத்த பெண் குழந்தையும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர் என குறிப்பிட்டதுடன் இந்த சிறுவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தைகள் பலாத்கார குற்றத்தின் கீழ் அந்த சிறுவனுக்கு தண்டனை வழங்கப்படும் என லினோ தெரிவித்தார்.
0 comments :
Post a Comment