சென்னை டெஸ்ட்: சச்சின் 81 ரன்னில் அவுட்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 380 ரன் குவித்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் 130 ரன்னும், ஹென்ரிக்ஸ் 68 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 7 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 71 ரன்னிலும், வீராட் கோலி 50 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். பேட்டின்சன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் கோலி 1 ரன்னில் எடுத்தார். சிடில் வீசிய 2-வது ஓவரின் கடைசி பந்தில் தெண்டுல்கர் பவுண்டரி அடித்து இன்று தனது கணக்கை தொடங்கினார்.
இருவரும் மிகவும் நிதானத்துடனும், பொறுப்புடனும் தொடர்ந்து ஆடி வந்தனர். மிகவும் சிறப்பாக ஆடி வந்த தெண்டுல்கர் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். லயன் பந்தில் போல்டு ஆனார். 159 பந்துகளில் 7 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். சதம் அடிக்க முடியாமல் தெண்டுல்கர் ஆட்டம் இழந்தது அனைவருக்கும் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. அப்போது இந்திய அணியில் ஸ்கோர் 196 ஆக இருந்தது.
கோலி 54 ரன்னில் இருந்ததார். 4 விக்கெட் ஜோடி 95 ரன் எடுத்தது. அடுத்து கேப்டன் டோனி களம் வந்தார். 64.2-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது.
0 comments :
Post a Comment