Wednesday, February 13, 2013

உயர்தர பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கை 75 சதவீதத்தால் உயர்த்தப்படும்

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு உயர்தர பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை 75 சதவீதத்தால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலிருந்து விலகும் மாணவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பு அல்லது பெருத்தமான தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படாதிருப்பதின், அதற்கு பிரதான காரணமாக அமைவது, மறுசீரமைக்கப்படாத கல்வி முறைமையேயாகும் எனக்குறிப்பிட்டுள்ள அமைச்சர், 2016ம் ஆண்டளவில், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்ப துறையில் கல்வியினை தொடரவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாவும் கூறியுள்ளார்.

மேலும், வர்த்தகத் துறையை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவீதமாக அதிகரிக்கவும், கலைத்துறையில் கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com