6வது முறையாக பெண்கள் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்ரேலிய அணி
6வது முறையாகவும் பெண்கள் உலகக் கிண்ணத்தை வென்று அசத்தியுள்ளது அவுஸ்ரேலிய பெண்கள் அணி. பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் மேற்கிந்திய- அவுஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. ஹெய்ன்ஸ் 52, கேமரூன் 75 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஓரளவு சிறப்பாக விளையாடினர்.
அவுஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குவின்டைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய அணி, அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல். 145 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதையடுத்து அவுஸ்திரேலியா மகளிர் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
0 comments :
Post a Comment