விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரம் மீற்றர் ஓடிய மாணவி திடீரென்று மயங்கி விழுந்து மரணம்- அதிர்ச்சியில் மாணவர்கள்.
அரனாயக்க உஸ்ஸபிட்டியவில் உள்ள ரிவிசந்த மத்திய கல்லூயின் விளையாட்டுப் போட்டில் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான மாணவி ஒருவர் தீடிரென்று மைதானத்தில் மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
மைதானத்தில் மயங்கி விழுந்த இந்த மாணவி மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் தொடர்பில் அரனாயக்க பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் குறித்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment