யாழ்ப்பாணத்தில் போலிகாசோலை மூலம் 59 இலட்சம் ரூபா மோசடி...!
யாழ்.மாவட்டதிலுள்ள பல இடங்களிலும் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் போதும் போலிக் காசோலை மூலமாக 59 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையவர்கள் தலைமறைவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment