Saturday, February 9, 2013

பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 5,609 மாணவர்கள்!

பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

//2011 - 2012 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்காக மேலதிகமாக மாணவர்கள் 5,609 பேர் உள்வாங்கப்படுவதுபற்றி எழுந்த பிரச்சினைக்கு பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்வைத்த தீர்வினை நடைமுறைப்படுவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதிவழங்கியுள்ளது.

அதன்படி, 2011 - 2012 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அதற்கான வெட்டுப்புள்ளிகளை மிக விரைவில் வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உயர்நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழகங்களுக்குப் மேலதிகமாக மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்வைத்த மனு மீளாய்வு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா இவ்வாறு உயர்நீதிமன்றத்திடம் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

பிரதம நீதியரசன் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீ பவன் மற்றும் ஈவா வனசுந்தர உள்ளிட்டோருடன் கூடிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்விடயத்தை ஆராய்ந்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு இந்தப் பிரச்சினை, 2011 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்த சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவரேனும் கலைப்பீடத்திற்கு, உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட சிறந்தபெறுபேற்றைப் பெறமுடியாமலேயே தோற்றம் பெற்றுள்ளது. இதனால் 2011 - 2012 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 5,609 பேர் உள்வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இருவேறு தீர்வுகளை அமுல்படுத்துவதற்காக கருத்து முன்வைத்தது. குறிப்பிட்ட அளவு புள்ளிகளைப் பெறாதோர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட மாட்டார்கள், அவ்வாறு பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்படாதோரினால் வெற்றிடமாகும் இடங்களை நிரப்புவதற்கு சிறந்த புள்ளிகளைப் பெற்ற ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனும் இரு விடயங்களுமே அவை. இந்த இரண்டு தீர்வுகளிலும் இரண்டாவது தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர் நீதிமன்றிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டதற்கேற்ப, உயர்நீதிமன்றம் இதற்கான அனுமதியை நேற்று முன்தினம் வழங்கியுள்ளது.
(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com