55 லட்சம் செலவில் காரை.யாழ்ரன் கல்லூரிக்கு புதிய மாடிக்கட்டிடம்
காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் 55 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய மாடிக்கட்டிடத்தை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் திறந்து வைத்துள்ளார். நேற்று நடைபெற்ற பாடசாலையின் புதிய கட்டிடத்திறப்பு விழாவில் இவர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.
மகிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இக்கட்டிடம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் பா.விக்கினேஸ்வரன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment