Thursday, February 21, 2013

கிளிநொச்சியில் புலிகளின் 43 கிலோ மீற்றர் மண் அணைகளை அகற்ற 14 மில்லியன் தேவை

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு கிளிநொச்சியிலுள்ள 43 கிலோ மீற்றர் நீளமான மண் அணைகளை அகற்றிச் சீர்ப்படுத்த, சுமார் 14 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவியாக படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

போரின்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளை அகற்றுவது பற்றி ஆராயும் கூட்டம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில இன்று நடைபெற்ற போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போரின்போது ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளும் பதுங்கு அகழிகளும் நீர் வாடிகாலமைப்பையும் நில அமைப்பையும் பாழாக்கியுள்ளன. இதனால் மழையினால் ஏற்படும் வெள்ளம் பல இடங்களிலும் தேங்கி, மக்களின் வாழ்விடங்களையும் பயிர்ச்செய்கைப் பரப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராய்ச்சி, மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com