Sunday, February 24, 2013

இங்கிலாந்தில் 400 குழந்தைகளை கொன்று ஆற்றில் வீசிய கொலைகாரி

இங்கிலாந்து தேசிய ஆவணகாப்பகம் கடந்த 1770 முதல் 1934-ம் ஆண்டுகளில் நடந்த 25 லட்சம் கொடுங்குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களை ஆன்லைனில் வெளியிட்டது. அதில், அமீலியா டயர் (58) என்ற பெண் மிக கொடூரமான இரக்கமற்ற கொலைகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 வயதான அமீலியா டயர் நர்சு ஆக இருந்தாள்.

திருமணத்துக்கு முன்பே கள்ளக்காதலில் தாயாகும் பெண்கள் தங்கள் குழந்தைகளை இவளிடம் கொடுத்து பராமரித்து வந்தனர். அதற்காக அவளுக்கு பணமும் கொடுத்தனர். அக்குழந்தைகளை வசதிபடைத்த தம்பதிகளிடம் தத்து கொடுத்து வளர்ப்பதாக உறுதி அளித்தாள். அதை நம்பி தங்கள் குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்து வந்தனர். ஆனால், அவள் அக்குழந்தைகளை கேம்ஸ் ஆற்றில் வீசி கொன்றாள். அது போன்று 400 குழந்தைகளை இரக்கமின்றி கொலை செய்தாள்.

இக்கொலைகளுக்காக அமீலியா டயர் கைது செய்யப்பட்டாள். இக்குற்றச் செயலுக்காக அவள் 1896-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டாள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com